தமிழர் போற்றிய மூலிகைகள் 2 கோவைக்காயின் மருத்துவச் சேவை

அற்புத மருத்துவ நன்மைகள் கொண்ட கோவைக்காய்

கோவைக்காயின் பலன்களில் முதன்மையானது ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது மட்டுமல்ல, ரத்த ஓட்டத்தை சீராக்குவதில் கொய்யாப் பழத்துக்கும் அத்திப் பழத்துக்கும் இணையான மருத்துவ மாயத்தைச் செய்கிறது. சென்னை சித்தமருத்துவ ஆராய்ச்சி மையத்தால் ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

கிளிகளுக்கு பிடித்தமான பழங்களில் முதன்மையானது கோவைப் பழம்! கோவைப்பழம், கோவைக்காய் உண்ணும் கிளிகளைப் பிடித்து சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஸ்வாமிநாதன் ஆராய்ச்சி மையம் செய்த ஆராய்ச்சியில், கிளிகளின் உடலில் ‘லோ கிளிசெமிக்’ வகை புரதம் கோவைப் பழங்கள், மற்றும் காய்களில் இருந்து கிளிகளுக்கு கிடைப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பே மதுமேகம் எனப்படும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கவும், இளவரசர்களை மதுமேக நோய் தாக்காமல் இருக்கவும் கோவைக்காய் கூட்டு, கோவைக்காய் பொறியல், கோவைக்காய் பானகம் என பல உணவுகளை அளித்து வந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

கொடித் தாவரமான கோவைக்காய், காடுகள், வேலிகளில் வளர்கிறது. இதன் இலையின் பிளவு அமைப்பைக் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை என்ற ஒருவகைப்  பிரிவுகள் உண்டு. இதனை ஆங்கிலத்தில் Coccinia cordifolia அதன் தாவரவியல் பெயரைச் சொல்லி அழைக்கிறார்கள். இதன் பூ வெள்ளை நிறமாக பார்க்க மிகவும் அழகாக இருக்கும். வீட்டின் மொட்டை மாடியில் பந்தல் அமைத்து கோவைக் கொடியை வளர்க்கலாம்! ஆண்டு முழுவதும் காய்த்துக் கொண்டிருக்கும். கோவைக்கொடியின்  இலை, காய், தண்டு, வேர் என எல்லாப் பாகங்களும் மருத்துவ குணமுடையனவாகும். இலைக்கஞ்சியில் இதன் இலை சேர்க்கப்படுவதுண்டு.கொஞ்சமாய் துவர்ப்புச் சுவையுடைய இந்த கோவைக்காயில் பொரியல், வற்றல், கூட்டு, சாம்பார் செய்து உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு.மற்றும் கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு.

நாக்கு சுவையை மட்டுமே கருதாமல் உடல் நலத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டால் எல்லா உணவுகளுமே விருப்ப முடையதாக மாற்ற முடியும். இதனைப் பொதுவாக எல்லோருமே சாப்பிடலாம். பரம்பரை காரணமாக சர்க்கரை நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால், சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். கோவைக்காயில் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது! இதுதவிர  போலிக் அமிலம், கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன.

கண்ணு குளிர்ச்சியை உண்டாக்கும். இலைச்சாற்றுடன் வெண்ணெய் சேர்த்து சிரங்குகளுக்குப் பூசலாம். இதன் இலைச்சாற்றைப் பருகி வந்தால் நாள் பட்ட நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கொவ்வங்காய் என்று கிராமப்புற வழக்கில் அழைக்கப்படும் கோவைக்காய், கோரோசனை மாத்திரை செய்யவும் பயன்படுகிறது. இந்த மாத்திரை நாக்கில் உள்ள வெடிப்பு, நாக்குப் புண், வாய்ப்புண் நீங்க சித்தமருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது!

வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். கோவைக்காய் வாங்கும்போதும் அல்லது உங்கள் தோட்டத்தில் இருந்து பறித்து பயன்படுத்தும்போதும் முற்றின கோவைக்காய் பயன்படுத்தக் கூடாது. பிஞ்சு காயாக பார்த்து வாங்கவேண்டும். பிஞ்சு காய் இளம்பச்சை நிறத்தில் இருக்கும்.இக்காய்யை சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்லாமல் எல்லோரும் சாப்பிட்டலாம். கோவைக்காய் மனிதனுக்கு சேவைக்காய்!

 

கோவைக்காயின் பலன்களில் முதன்மையானது ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது மட்டுமல்ல, ரத்த ஓட்டத்தை சீராக்குவதில் கொய்யாப் பழத்துக்கும் அத்திப் பழத்துக்கும் இணையான மருத்துவ மாயத்தைச் செய்கிறது. சென்னை சித்தமருத்துவ ஆராய்ச்சி மையத்தால் ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

Comments

Leave a Comment