தமிழர் போற்றிய மூலிகைகள் 3 கற்பூரவள்ளி ஒரு ஃபேமிலி டாக்டர்

கற்பூர வள்ளி.. நூரையீரலுக்கு கில்லி

தோட்டம் உள்ள வீடு என்றால் நீங்கள் அதிஷ்டசாலி! மாநகரி வசிப்பவர் என்றால் மொட்டை மாடி, அடுக்குமாடி அபார்ட்டிமெண்டில் வசிப்பவர் என்றால் இருக்கவே இருக்கிறது பால்கணி. அழகுக்காகவும், பயன்பாட்டுக்காகவும் நீங்கள் வளர்க்கும் செடிகொடிகளில் மூலிகைகளுக்கு  கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்தால், உங்கள் வீட்டில், சிசிக்சைக்கு பணம் கேட்காத பல ‘கிரீன் டாக்கர்களை’ வளர்க்கிறீர்கள் என்று அர்த்தம்! அவற்றில் துளசி, கற்பூரவள்ளி, சித்தரத்தை, சிறியாநங்கை என பல  தமிழ் மூலிகைகளை வளர்க்கலாம்! இவற்றில் சில அழகாக பூப்பூக்கும்! சிலவற்றின் இலைகளே பார்க்க அழகாக இருக்கும்! இலைகள் பார்க்க அழகாகவும் புஷ்டியாகவும் சாறு நிறைந்தும் இருக்கும் ஒரு மூலிகைதான் கற்பூரவள்ளி! பெயரே கூட எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள்!

கற்பூரவள்ளியை தமிழ்நிலப்பரப்பில் நீங்கள் பார்த்திருக்கலாம்! ஆனால் அதன் மருத்துவக் குணங்கள் உங்களுக்கு தெரிமா? சிலர் அறிந்திருக்கலாம்! இப்போதாவது இந்த அரிய தமிழ் மூலிகையின் ஆச்சர்யமான குணங்களையும் பலன்களையும் தமிழ்ஸ் வழியாக தெரிந்து கொள்ள வந்திருக்கும் நீங்கள் அதிஷ்டசாலி வாசகர்தான்!

வீடுகளில் தொட்டிகளில் வளர்க்க மிகவும் ஏதுவான கற்பூரவள்ளியின் மருத்துவக் குணங்களைப் பட்டியலிட ஆரம்பித்தால் இங்கே பக்கங்கள் போதாது! இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும்  பல்வேறு சுகவீனங்களிலிருந்து உடனடி நிவாரனம் தரக்கூடிய மூலிகை! இதன் இலைகள் காரம் கலந்த சுறுசுறுவென்ற சுவையுடன் இருக்கும்.


காச இருமல் கதித்தம சூரியயையம்

பேசுபுற நீர்க்கோவை பேருங்காண் -வீசுசுரங்

கற்பாறை யொத்துநெற்சிற் கட்டுகபம் வாதமும்போங்

கற்பூர வள்ளிதனைக் கண்டு


என அகத்திய மாமுனி தமது குணபாடம் வைத்திய நூலில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் பாடிவைத்த மூலிகை என்றால் இது  தமிழர்களின் மாபெரும் நிலப்பகுதியாகியாகி லெமூரியா கண்டம் இருந்த காலத்தின் மூலிகை என்பதௌ நினைத்து தமிழர்கள் ஒவ்வொருவரும் பெருமைப்படுவது மட்டும்ல்ல… கற்பூரவள்ளியின் காப்புரிமையை எந்த பன்னாட்டு நிறுவத்திடமும் இழந்துவிடாமல் பாதுக்காக்க வேண்டியது நம் கடமை!

இனி கற்பூரவள்ளியின் சாறு கொண்டு என்ன சாதிக்கலாம் என்பதைப்பார்க்கலாமா? சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். இது அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகைகளில் பாதித்து பல நோய்களை உண்டாக்கிவிடலாம். முக்கியமாக குழந்தைகளுக்கு தொடக்க நிலையில் இருக்கும் ரன்னிங்க் நோஸ் எனப்படும் ஜலதொஷத்துக்கு அற்புத மருந்து கற்பூரவள்ளி. முக்கியமாக ஜலதோஷத்தின் முதல் இரண்டாம் நாள் என்றால் ஒழுகும் மூக்கை நிறுத்த தயவு செய்து ஆங்கில மருந்துகளைக் கொடுத்து அதை நிறுத்துவது பெற்றோர்கள் செய்யும் பெரிய முட்டாள்தனம். காரணம் ஒழுகும் மூக்கை நிறுத்தினால் அது கட்டிச்சளியாகி, பிறகு அதே மருத்துவர் ஐந்து நாள் கழித்து ‘ஆண்டிபயாடிக் மருந்து கொடுத்து சளி வெளியே வராமல் அதை டிரை செய்வது குழந்தையில் கழுத்தில் கத்தி வைப்பதற்கு சமம்! குழந்தைகளின் ஜலதோஷத்துக்கு கற்பூரவள்ளிச்சாறானது நூரையீரலில் கட்டியிருக்கும் சளி மற்றும் நீரை மூக்கு வளியாகவும், நிறுநீர், வாந்தி, மலம் ஆகியவற்றின் வழியாகவும்வெளியேற்றி விடும் வேளையைச் செய்கிறது!

கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், ஜலதோஷம், நாள் பட்ட சளி, வறட்டு  இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும்( கேஸ்ட்ரிக் பிரச்சனை) விலகும். அதேபோல வீசிங் உள்ள ஆஸ்துமா பாதிப்பிலிருந்து விடுபட கற்பூரவள்ளிபோன்ற ஒரு அருமருந்தை நீங்கள் பார்க்க முடியாது!

இன்று ’ஏர் பொல்யூசன் ‘ எனப்படும் காற்றில் கலந்து வரும் தூசி மாசு நிறைந்த மாநகரங்களில் வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கும் நோய்களில் ஆஸ்துமா முக்கியமானது! இதற்கு ஆங்கில மருத்துவத்தில் அஸ்தலின் என்ற மருந்து தருகிறார்கள். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த மருந்தை பயன்படுத்த முடியாது. ஆனால் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கற்பூரவள்ளி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்தி வந்தால் ஆஸ்துமாவினால் உண்டான பாதிப்புகளிலிருந்து படிப்படியாகக் குணமடைந்து ஒரு கட்டத்தில் நிரந்தர தீர்வைப் பெறலாம்! இதற்கு மேலும் கற்பூரவள்ளியை நீங்கள் வளர்க்க தவறுவீர்களா என்ன?

 

 


Comments

Leave a Comment