செப்டம்பர் 1-ம் தேதியான் இன்று உலக கடித நாள். இன்று நவீன தொடர்புச் சாதங்களால் கையால் எழுதப்படும் கடிதம் எனும் அற்புதம் இல்லாமல் போய்விட்டது. மற்றவர்கள் நமக்கு கைப்பட எழுதிய கடித்தத்தை சுமந்துவரும் அஞ்சல்க்காரர்கள் மிதிவண்டியில் வரும் தேவதூதர்களைப் போன்றவர்கள். அதேபோல நமக்கு உறவுகளும் நண்பர்களும் எழுதிய கடித்ததை பிரித்து படித்தால் பிரித்தவர்களின் வாசத்தை உணரலாம். தமிழில் கடித இலக்கியம் என்றே கடிதங்களுக்கு இருந்த முக்கியத்துவம் தனி இலக்கிய வகையாக புகழ்பெற்றதிலிருந்தே கையால் எழுதப்படும் கடிதங்களின் முக்கியத்துவம் தெரிந்துவிடும்.
இன்றைக்கும் பிரபலங்கள் எழுதிய கடிதங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய அற்புதத்தைக் கொண்டவை. கலைஞர் கருணாநிதியின் கடிதங்களும் அவற்றில் அடக்கம். கையால் எழுதி விற்கும் பத்திரிகையில் துவங்கி, டிஜிட்டல் ஊடகம் வரை தமிழ் இவ்வுலகுடன், உலக தொழில்நுட்ப வளர்ச்சியுடன் பல வடிவங்களில் கண்டது. தமிழ் எத்தனை ஊடக வகைகளில் வளர்ந்து வந்த போதும், அந்த அத்தனையிலும் தனது பங்களிப்பைக் அளித்துத் தொண்டாற்றியாவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். மாணவர் நேசன் என்ற கையால் எழுதி விற்கும் பத்திரிக்கையில் துவக்கிய தனது தமிழ் எழுத்தாளுமையை, அச்சு பத்திரிக்கை, வானொலி, நாடகம், தொலைக்காட்சி, திரைப்படம், முகநூல் வரையிலும் தன் பங்கினை சோர்வடையாமல் செலுத்தியவர் கருணாநிதி.
கருணாநிதி மேடைப் பேச்சு, கவிதை, புதினம், சிறுகதை என பெரும்பாலான தமிழ் இலக்கிய வகைகளில் தனது எழுத்தாளுமையை நிரூபித்தவர் கலைஞர். தனக்கான தனித்துவத்தை உலகறிய செய்தவரும் கூட. கலைஞர் தனது எழுத்து, பேச்சு, வசனம், கதை, நாடகத்தில் தமிழை திறம்பட கையாண்டிருக்கிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், கடிதம் எழுதுவதிலும் கூட ஒரு தனிதன்மையை கையாண்டிருக்கிறார் கலைஞர் கருணாநிதி. 04.12.1945ல் கருணாநிதி அவர்கள், திருவாரூரை சேர்ந்த தனது தோழர் திருவாரூர் கு. தென்னன் என்பவருக்கு எழுதிய கடிதத்தை சங்குசக்கரம் போன்ற வடிவத்தில் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தின் முடிவு அதன் நடுவே, கலைஞரின் மு.க எனும் கையொப்பத்துடன் முடிகிறது.
மு.கருணாநிதி எழுதிய வினோதக் கடிதம்!


Comments
cheap call girls in gurgaon
2 years agoThis place is one oof the most common market place. https://callgirlsingurgaonservice.com/
Parbriz auto BMW Seria 3 Gran Turismo F34 2016
2 years agoAsking questions are really fastidious thing if you are not understanding anything fully, except this article offers nice understanding yet. https://vanzari-parbrize.ro/parbrize/parbrize-bmw.html
Geamuri auto bmw seria 3 2010
2 years agoWrite more, thats all I have to say. Literally, it seems as though you relied on the video to make your point. You clearly know what youre talking about, why waste your intelligence on just posting videos to your site when you could be giving us something enlightening to read? https://vanzari-parbrize.ro/geamuri/geamuri.php