அசல் நாயகனா அஜித்?

ஆங்கில நகைச்சுவையில் மக்களை வெகுவாக மனம் கவர்ந்த மிஸ்டர். பீன் நாயகன் தனக்கு 55 வயதாகிவிட்டதால், மிஸ்டர். பீன் நிகழ்ச்சியில் இனிமேல் நடிக்கப் போவதில்லை என்று கூறிவிட்டதாக சமீபத்தில் ஒரு வார இதழில் செய்தி வெளியாகி இருந்தது. மிஸ்டர். பீன் கதாபாத்திரம் மிகவும் இளமையானதாகும். அதில், வயதாகிவிட்ட தான் நடிப்பது நியாமாகாது என்றும் அவ்வாறு இந்த வயதான நிலையில் தொடர்ந்து நடிப்பது அந்தப் பாத்திரத்துக்குத் தான் இழைக்கும் அநீதியாகும் என்று காரணம் சொல்லியிருக்கிறார்.நம்மூர் நாயகர்கள் இதைப் படித்தாவது திருந்துவார்களா என்ற கேள்வி மனதில் எழாமல் இல்லை.

எம்.ஜி. ஆர் என்றுமே தன் நிஜ தோற்றத்தை ஒப்பனையால் மறைத்து தன்னை வெகு இளமையாக 60 வயதிலும் காட்டிக் கொள்ள மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டவர். திரையில் மட்டும் இன்றி பொது நிகழ்ச்சிகளில் கூட அவர் ஒப்பனையுடந்தான் வலம் வந்தார். சிவாஜி கணேசன் அந்த அளவு செய்ய விட்டாலும் தன்னுடைய வயதை ஒப்பனையால் மறைத்து திரையில் தோன்றி நடித்து வந்தார். இந்த மரபுகளை உடைத்து பொது வாழ்வில் தன்னுடைய உண்மையான இயல்பான தோற்றத்துடன் மக்களை சந்தித்தது ரஜினி மற்றும் சத்யராஜ் மட்டுமே. இருப்பினும், ரஜினி கூட திரையில் இன்னமும் தன் வயதுக்குப் பொருந்தாத கதாப் பாத்திரங்களில் மிகைப் படுத்தப்பட்ட ஒப்பனையுடன் நடிப்பது தேவையா எனத் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்வது நல்லது. கமலும் இதற்கு விதி விலக்கல்ல என்று சொன்னால் அது மிகையாகாது.

வயதுக்கேற்ற கதாப்பாத்திரத்தில் நடிப்பது மட்டுமே கலைக்கு நாம் செய்யும் நீதியாகும் என்று என்று நம்மூர் நாயகர்கள் எப்போது உணர்வார்கள் என்ற கேள்வி எழும் அதே வேளையில், இந்த விஷயத்தில் தன்னுடைய நிஜத் தோற்ற்றம் மூலம் ரசிகர்கள் நெஞ்சத்தில் இடம் பிடித்த அஜித்தின் அணுகுமுறைப் பாராட்டுக்குரியதாகும். மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவது, பிறர்க்கு அவர் தேவை அறிந்து வலியச் சென்று உதவி செய்வது, தன்னுடைய நிஜத் தோற்றம் மற்றும் வயதை துணிச்சலாகத் திரையில் வெளிப்படுத்திய அஜித் மட்டுமே தமிழ் திரை உலகின் அசல் நாயகன் எனபதில் சந்தேகம் இல்லை. அஜித் இத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் தன் வயதுக்கேற்ற கதாப்பாத்திரத்தில் மட்டுமே வருங்காலத்தில் நடித்தால், தமிழ்த் திரையின் தன்னம்பிக்கையுள்ள மற்ற நடிகர்களும் இதனை பின்பற்றுவார்கள். செய்வாரா "தல" ?

- கட்டுரையாளர்: க. சந்தானமணி

Comments

 • GeraldDI

  5 months ago

  ?????????? ????????? ?????????? ??? ios - web-think.md/

 • TiffanyGaus

  8 months ago

  Error 212 origin is unreachable

 • Breakout News Online

  one year ago

  You are a very smart person! http://bqapi.6tws.us/api/GetBqSiteUrlswl

 • lucabet

  2 years ago

  I always emailed this website post page to all my associates, for the reason that if like to read it afterward my links will too. https://lucabet168.com

 • Isabella

  2 years ago

  Heya i’m for the first time here. I found this board and I find It truly useful & it helped me out much. I hope to give something back and aid others like you aided me. I could not refrain from commenting. Well written! I am sure this post has touched all the internet people, its really really good article on building up new web site. http://www.cspan.net

Leave a Comment