தமிழர் போற்றிய மூலிகை 1 பிரண்டை நம்ம ஃபிரெண்ட்

பிரண்டை பார்க்க மட்டுமல்ல.. குடல் அழுக்கை கழுவும் அழகு மூலிகை

நம் அருகாமையில் இருக்கும் அபூர்வ தமிழ் மூலிகைகள் நமக்கு உற்ற நண்பர்கள் போன்றவை! அவற்றின் அதிவேக மருத்துவக் குணங்களை அறியாமல் , சின்ன தலைவலி, தலைசுத்தல் என்றால் கூட அலோபதி டாக்டரை பார்க்க ஓடுகிறோம்! தலைவலி, தலைசுற்றல் என்று இங்கே வார்த்தை அழகுக்காக எழுதவில்லை! ஓய்வின்மையால் வரும் தலைவலி, தலைபாரம், தலைசுற்றல் ஆகிய மூன்றையும் உடனடியாக போக்கக் கூடிய உங்கள் ஃபிரெண்ட் என்று பிரண்டை சூப்பை சொன்னால் துள்ளியமாக இருக்கும்! இதைவிட நம் உயிரை வளர்க்கும் முக்கிய உறுப்பாக வயிறு இருக்கிறது. வயிறு  தொடர்பான பல நோய்களை பிரண்டை பின்னிப் பெடலெடுத்து துரத்தியடிக்கிறது! கொழுப்பை கரைப்பதில் பிரண்டை கிட்டத்திட்ட ஒரு இரக்கமற்ற மூலிகை தாதா! இதையும் வீட்டில் தொட்டியில் வளர்க்கலாம். பார்க்கவும் அழகாக இருக்கும்!


பிரண்டை நாற்கோண வடிவ தண்டுகளையுடைய கொடி இனத் தாவரமாகும். பற்றுக் கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டு இருக்கும். இதன் சாறு நம் உடலில் பட்டால் நமைச்சல் ஏற்படும் அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த சாறு கொண்டது! இந்த நமைச்சல் சக்தி, நம் ரத்ததில் இருக்கும் உபரியான கொழுப்பையும், கொழுப்பு முடிச்சுக்களையும் கரைக்கும் வல்லமை கொண்டது! இதைவிட ஆச்சர்யமான செய்தியை தெரிந்து கொள்ளுங்கள்!

பிரண்டையின் தாயகம் இந்தியா என்றால் உங்களால் நம்ப முடிகிறதா!? இலங்கை, வங்காள தேசம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் இந்த மூலிகையில் ஓலைப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளன. வேறுபெயர்கள்: கிரண்டை அரிசணி.  வச்சிரவல்லி. தாவரப்பெயர் -: VITIS QUADRANGULARIS.

கேஸ்ட்ரிக் டிரெபிள் எனப்படும் வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும். பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் குணமாகும். வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.

இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடும். பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும். பெண்களுக்கு சூதக வலியின்போது ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கும் பிரண்டை சிறந்த மருந்தாகும். பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.
 
இது ஒரு சிறந்த கரு கலைப்பானாக நீண்ட காலம் பயன்பாட்ட்டில் இருந்து வந்துள்ளது .எனவே தான் மனதிற்கு பிடிக்காமல் போன மகனையோ ,மகளையோ உன்னை பெற்றதற்கு வயிற்றில் பிரண்டை வைத்து கட்டி இருக்கலாம் என்கிற வசவு சொல் இன்றும்  கிராமப்புற தமிழகத்தில் வழக்கில் இருக்கிறது . பிரண்டை ரசம், பிரண்டைத் துவையல், பிரண்டை சூப், செய்து சாப்பிடும் முன் உங்கள் பகுதியின் பழத்த பழமான முதியவர்களிடம் உங்கள் ஊரில் கிடைக்கும் நாற்பிரண்டைக் கொடியைக்(நான்கு பக்கங்களைக் கொண்ட தண்டுகளை உடைய வெளிர் பச்சை நிறப்பிரண்டை பாதுகாப்பானது) காட்டி இதைப் பயன்படுத்தலாமா என கேட்டுக் கொள்ளுங்கள். காரணம் பிரண்டையில் நச்சுத்தன்மை கொண்டவையும் நிறைய உண்டு! எனவே கவணம் தேவை! சரியான பிரண்டையை நீங்கள் கண்டடைந்து விட்டாலோ உங்களுக்கு பொக்கிஷம் கிடைத்த மாதிரிதான்! தமிழ்ஸ் வாசகர்களின் நலனில் அக்கறையோடு நச்சுத்தன்மையற்ற பிரண்டையின் படத்தை இங்கே வெளியிட்டிருக்கிறோம் பாருங்கள்! நீங்கள் வெளிநாட்டில் வசிப்பவர் என்றால் தமிழகம் வரும்போது பிரண்டை செடியின் சின்னஞ்சிறு சிவப்பு நிற பழங்களை எடுத்துச் சென்று உங்கள் வீட்டில் பிரண்டைக் கொடியை உருவாக்கி விடலாம்! உறைபனி நாடுகளைத் தவிர மற்ற அனைத்து நாடுகளிலும் வளரும் தன்மை கொண்டது! பிரண்டையை அடிப்பையாக வைத்து நிறைய மருந்துகள் உலகம் முழுவதும் புழக்கத்தில் இருக்கின்றன. நம்பிக்கையானதை கண்டுபிடித்தும் பயன்படுத்தலாம்!


Comments

Leave a Comment