விஜயதசமி ஏன் கொண்டாடுகிறோம்?


மௌரிய பேரரசர் சாம்ராட் அசோகர் கலிங்க போரில் மிகப்பெரிய வெற்றிபெற்றார். அந்த வெற்றியை அவர் கொண்டாடிய சூழ்நிலையில் புத்த பிக்குகள் பேரரசர் அசோகரை நோக்கி "நீங்கள் வெற்றி பெறவில்லை மாறாக பல லட்சம் மக்களை கொலை செய்து அவர்களின் குடும்பத்தினரை மீளா துக்கத்தில் ஆழ்த்தியதன் மூலம் தோல்வி அடைந்துள்ளீர்கள்" எனக்கூறி நீங்கள் போர்க்களத்தில் சென்று பாருங்கள் என்று அறிவுறுத்தினர்.  அதன்படி போர்க்களத்தில் சென்று பார்க்கையில் இரத்த ஆறு ஓடியது. இரு நாட்டு படை வீரர்களின் மனைவிகள், குழந்தைகள், உறவினர்கள் கதறி அழும் காட்சியை பார்க்க நேரிட்டது. இந்த காட்சி பேரரசர். அசோகர் மனதில் மீளா துயரத்தை ஏற்படுத்தியது. தன் நாட்டு குடி மக்களை சோகத்தில் மூழ்கடித்து நான் பெற்றது வெற்றியல்ல தோல்வி என்பதை உணர தொடங்கினார். பின்னர் புத்த பிக்குகள் புத்தரின் தம்மத்தை போதித்து அதன் படி ஆட்சி செய்யும் போதுதான் மக்களிடம் மகிழ்ச்சி உண்டாகும். 

போர் புரிந்து, போரில் உயிரை கொல்வதால் மக்களுக்கு துன்பமே நேரும் என அறிவுறுத்தினர். புத்தரின் போதனைகளால் மனம் மாற்றம் அடைந்து இனிமேல் போர் புரியபோவதில்லை என முடிவெடுத்து ஆயுதங்களை கிடங்கில் போட்டுவிட்டு பூசை செய்தது தான் இப்போது நாம் கொண்டாடும் ஆயுதபூசை. அதற்கு அடுத்த நாளான தசமி அன்று மாமன்னர் அசோகர் பௌத்தம் ஏற்று  புத்தரின் தம்மத்தை கற்க பௌத்த பள்ளிக்கு சென்றார்.

 இந்த நாள் தான் உண்மையில் நான் வெற்றி பெற்ற நாள் என பிரகடனம் செய்தார். அதனால் தான் இந்த நாளை மட்டும் விஜயதசமி  என்கிறோம்.  மாமன்னர். அசோகரை பின்பற்றி இந்திய நாடு முழுவதும் உள்ள மக்கள் பௌத்தம் ஏற்று புத்தரின் தம்மத்தை கற்க பௌத்த பள்ளிகளுக்கு சென்றனர். இந்த வழக்கம் தான் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று குழந்தைகள் பௌத்தம் ஏற்று புத்தரின் தம்மத்தை கற்க பௌத்த பள்ளிக்கு செல்லும் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

முக்கிய குறிப்பு: மாமன்னர் அசோகர் பௌத்தம் ஏற்ற இதே விஜயதசமி நாளான அக்டோபர் 14 ல் தான்  அண்ணல். அம்பேத்கர் அவர்களும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுடன் பௌத்தம் ஏற்றார். இன்றும் ஓவ்வொரு ஆண்டும் அதே அக்டோபர் 14-ல் பெருந்திரளாக பௌத்தம் ஏற்பு நடைபெற்று வருகிறது. 2020-ம் ஆண்டில் அக்டோபர் 25-ம் தேதி விஜயதசமி தினம் வருகிறது. 

கட்டுரையாளர்: டாக்டர் சுரேஷ் பீம்

Comments