மூன்று நூற்றாண்டுகளைப் பார்த்த உலகின் ஒரே மனிதர்

மெக்ஸிகோவைச் சேர்ந்தவர் மேனுவல் கார்ஸியா ஹெர்னாண்டஸ். பிறப்புச் சான்றிதழின்படி இவரது வயது 121. டிசம்பர் 24, 1896 அன்று பிறந்தவர். மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்த பெருமைக்குச் சொந்தக்காரான இவர், உலகின் அதிக வயது கொண்ட சரித்திர சாதனையாளரும்கூட!

இப்போதும் இவர் தனது வேலைகளைத் தானே செய்துகொள்கிறார். தான் வளர்க்கும் கோழிகளுக்கு உணவளிக்கிறார். ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் செயல்படுவதே முதுமையின் சிக்கல்களிலிருந்து விடுபட ஒரே வழி என்பதே உலக மக்களுக்கு இவர் சொல்லும் செய்தி!

Comments