நாடார் சமூகம் குறித்து பொய்யுரைத்த பாடத்தை நீக்கியது NCERT!

தேசியப் பாடநூல் ஆராய்ச்சி நிறுவனம் (NCERT) வெளியிட்டுள்ள பள்ளிப் பாடநூல்களில் 50 சதவிகிதப்  பகுதிகளைக் குறைத்து மாணவர்களின் புத்தகச் சுமையைக்  குறைக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாடுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார். இதன் தொடக்கமாக, ஒன்பதாம் வகுப்பு வரலாற்றுப் பாடநூலிலிருந்து மூன்று அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதற்கு, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உடனே பாடப்பகுதியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 2016-ம் ஆண்டு, சி.பி.எஸ்.இ, இந்தப் பாடத்திலிருந்து எந்த விதமான கேள்வியும் தேர்வில் கேட்கப்படாது என்று அறிவித்திருந்தது.  தற்போது தேசியப் பாடநூல் ஆராய்ச்சி நிறுவனம் பாடத்தை முழுமையாக நீக்கியுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கவிதையை எட்டாம் வகுப்பு இந்திப் பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், `தேசியப் பாடநூல் ஆராய்ச்சி நிறுவனம் ஒவ்வொரு பாடப்புத்தகத்திலிருந்தும் ஐம்பது சதவிகித அளவுக்குப் பாடங்களைக் குறைக்கப்படும்' என்று தெரிவித்திருந்த நிலையில்,  தேசியப் பாடநூல் ஆராய்ச்சி நிறுவனம், `அனைத்துப் பாடப்புத்தகங்களிலிருந்தும் 20 சதவிகித பாடங்கள் குறைத்திருப்பதாக' கருத்து தெரிவித்துள்ளது.

Comments

Leave a Comment