கமல் நேர்மையான வழியில் சாம்பாதிப்பது ஏன் உங்களுக்கு வலிக்கிறது?

ராஜ்கமல் நிறுவனத்தின் 50-வது தயாரிப்பு மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் தனது 232-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இதையொட்டி அந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புடன் போஸ்டர் டிசைன் ஒன்றும் நேற்று வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு கமல் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் தள்ளியிருக்கிறது. மேலும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க இருக்கிறார் கமல். மற்றொரு பக்கம், தமிழக சட்டசபைத் தேர்ந்தலும் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் , தனது கட்சி நிர்வாகிகளுடன் காணொளி வழியாக கூட்டம் நடத்தி விவாதித்து வந்தார். ‘திமுக,’ உள்ளிட்ட எந்தக் கட்சியுடனும் கூட்டணி கிடையாது. அந்த நம்பாசையுடன் இருப்பவர்கள் இப்போதே விலகிவிடுங்கள், அல்லது நான் வெளியேற்ற வேண்டியிருக்கும் என்று அக்கூட்டத்தில் எச்சரித்துள்ளார் எனத் தெரிகிறது.  மற்றொருப்பக்கம் தனது ட்விட்டர் பக்கம் மூலம், மக்கள் பிரச்சினைகள் பற்றி உடனக்குடன் தனது எதிர்வினையை சிறப்பாகவும் நடுநிலையாகவும் செய்து வருகிறார் கமல். அதேநேரம் மக்கள் நீதி மையம் கட்சியினர் முடங்கி இருக்காமல், மாவட்டம், வட்டாராம், கிராமம் என கொரோனா நிவாரணப் பணிகளைச் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ‘கரோனாவுக்கு பயந்து பிக்பாஸ் போல உள்ளே இருந்தார் கமல்’ என்று விமர்சித்துள்ளார் கமல். மேலும் சிலர், சினிமாவில் நடிக்க மட்டும் கமல் தீவிரம் காட்டுகிறார் என்று கமலை விமர்சித்தனர். கமலை இப்படி விமர்சனம் செய்ததும் சமூக வலைதளங்களில் அவரது உண்மையான ரசிகர்கள் கொதித்தெழுந்துவிட்டனர். ’க்யூபிட் புத்தா @CupidBuddha என்ற கமலின் ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில்: “அரசியல்வாதியா இருந்துட்டு நீ நடத்துர சாராய ஃபேக்டரிய மூடு, கட்டப் பஞ்சாயத்து செய்யுறத நிறுத்து, கத்த கத்தயா காசு வாங்கிட்டு கல்வித் தந்தையா? இப்படிலாம் கேள்வி கேக்க வக்குப்பு*தி இல்லை, ஆனா @ikamalhaasan
 அரசியலுக்கு வந்த பிறகும் நேர்மையான வழில சம்பாதிச்சா இவனுங்களுக்கு வலிக்கும்” என்று விமர்சனம் செய்துள்ளார். இதற்கு சக கமல் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த ரசிகரின் மனநிலையும் கருத்து முற்றிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. கமல், சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்திருக்கிறார். அதேபோல, வரிமான வரியை மிகச்சரியாக செலுத்தி வருவதிலும் அவரை மிஞ்ச தமிழ் சினிமாவில் வேறு யாருமில்லை. இந்தியன் 2 விபத்தில் இறந்தவர்களுக்கு தனது சொந்தப் பணத்திலிருந்து மறுவாழ்வு நிதியை அளித்தவர் கமல். இதை தமிழகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

Comments

  • test

    12 months ago

    test comment

Leave a Comment