சமீபத்தில் காணொலிக் காட்சி வழியாக தனது மக்கள் நீதி மையம் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் உரையாடினார் கமல். அப்போது திமுக, அதிமுகவுடன் கூட்டணி என்று பேசுபவர்கள் தயவு செய்து கட்சியைவிட்டுப் போய்விடுங்கள். என்ன நோக்கத்துகாக மக்கள் நீதி மையம் துவக்கப்பட்டதோ அதை இல்லாமல் ஆக்கிவிடாதீர்கள். அதை மீறி அழுத்தம் கொடுத்தால் கட்சியைக் கலைத்துவிட்டு அதை வேறு இயக்கமாக மாற்றிவிடுவேன் என அவர் நிர்வாகிகளை எச்சரித்திருப்பதாக அந்தக் காணோலிக் காட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் சிலர் தெரிவிகின்றனர்.
இதற்கிடையில் கமல் கரோனா ஊரடங்கில் எப்படி இருப்பார் என்பதைத் தெரிந்துகொள்ள அவரது ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். அவர்களுக்காக தனது புதிய தோற்றத்தை கமல் வெளியிட்டு உள்ளார். அதை கமலின் ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கியிருக்கிறார்கள்.
கமலின் கோபமும் புதிய தோற்றமும்!


Comments