மிகக் குறைந்த விலையில் 10 கோடி ஸ்மார்ட் போன்களை விற்க ஜியோ திட்டம்!

செல்லூலர் மற்றும் 4ஜி சந்தையில் முன்னனிலை வகித்துவரும் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ. அதன் தலைவர் முகேஷ் அம்பானி ‘மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் தயாரிக்க இருப்பதாகவும், அதற்கான ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கூகுள் நிறுவனம் வழங்க இருப்பதாகவும் இதற்காக இரு தரப்புக்கும் இடையில் தொழில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும்’ கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தார்.  இந்த ஒப்பந்தத்தையடுத்து  கூகுள் நிறுவனம் 4.5 பில்லியன் டாலர்களை ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வதாகக் கூறப்பட்டது.

இதன் எதிரொலியாக வரும் டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சந்தையிலேயே மிகக் குறைந்த10 கோடி ஸ்மார்ட்போன்களை சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டுவர இருப்பதாகவும், அறிமுக சலுகையாக ஜியோ ஸ்மார்ட் போன்களை வாங்கும் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இலவச 4ஜி இணைய சேவை வழங்கப்பட இருப்பதாகவும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

பங்கு விற்பனை

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 33 சதவீத பங்குகளை விற்பனை செய்து ரூ.1.52 லட்சம் கோடி நிதித் திரட்ட திட்டமிட்டது. இதனால் ஃபேஸ்புக், கூகுள், குவால்கம், இன்டெல் சர்வதேச நிறுவனங்கள் ஜியோவில் முதலீடு செய்யத் தொடங்கின. இதன்மூலம் இந்தியாவின் மதிப்புமிக்க தொடத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமாக ஜியோ உருவெடுத்துள்ளது.

Comments

Leave a Comment