அடுத்த 50 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் நிலை இதுதானா?

சமீபத்தில் டெல்லியில் நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால தலைவராக சோனியாகாந்தி நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்நிலையில், கட்சிக்கு முழுநேர திடமான தலைமை கோரி  ‘அதிருப்தி’ கடிதம் எழுதிய குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 24 மூத்த தலைவர்களுக்கு இந்த முடிவு திருப்தி அளிக்கவில்லை. கட்சித் தோ்தல் மூலம்தான் தலைமையைத் தோ்ந்தெடுக்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கையை அவர் அக்கடித்ததில் முன்மொழிந்திருந்தாகத் தெரிகிறது. இதுதொடர்பாக ஏ,என்.ஐ. செய்தி முகமைக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் காங்கிரஸ் கட்சி எதிர்கால நிலைமை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படையாகத் தேரிவித்திருக்கிறார். அதில் அவர்:

 “எனது கட்சி அடுத்து வரும் 50 ஆண்டுகளுக்கு ஆட்சி மன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்க விரும்பினால், கட்சிக்குள் தேர்தல் தேவையில்லை. காங்கிரஸை வலுவாகவும் சுறுசுறுப்பு மிக்க இயக்கமாகவும் மாற்றுவதே குறிக்கோள். கட்சியின் உட்கட்சி செயல்பாடுகளில் உண்மையான அக்கறை கொண்டவர்கள், காரியக் கமிட்டிக்கு தேர்தல் நடத்தி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை வரவேற்பார்கள். காங்கிரஸ்  கட்சியை செயல் திறன் மிக்க இயக்கமாக மாற்றவே காரியக் கமிட்டிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன். காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு தேர்தல் நடத்தி, அதன் உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நிர்ணயித்தால் என்ன தீங்கும் நேர்ந்து விடாது. எனவே தேர்தல் மூலம்தான் கட்சிக்கான திடமான நிரந்தர தலைவா் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும்.

தோ்தலில் போட்டியிட்டு தோ்வாகும் போதுதான், குறைந்தபட்சம் 51 சதவீத கட்சியினராவது உங்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆனால், நியமிக்கப்படும் தலைவருக்கு ஒரு சதவீதம் கூட ஆதரவு இருக்காது. காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா்கள் தோ்தல் வழியாக நியமனம் செய்யப்பட்டால், அவா்களை பதவியிலிருந்து எளிதாக நீக்க முடியாது. எனவே, தோ்தல் மூலம் தேர்ந்தெடுப்பதில் ஏன் தயங்கவேண்டும் கட்சியின் அகில இந்திய தலைவா், மாவட்ட தலைவா்கள், மண்டல தலைவா்கள், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா்கள் என அனைவரும் தோ்தல் மூலமே தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். இதைத்தான் எங்கள் கடிதத்தில் வலியுறுத்தினோம். ”என்று அவர் கூறியிருக்கிறார் குலாம் நபி ஆசாத்.

Comments

 • MariaGaus

  3 weeks ago

  Amazon Relational Database Service (RDS)

 • Minneapolis Pet Stain Carpet Cleaner

  one year ago

  Fabulous, what a website it is! This blog provides valuable facts to us, keep it up. http://utevska.cz/cracked-nipple/

 • Betsy

  one year ago

  These are really impressive ideas in about blogging. You have touched some nice factors here. Any way keep up wrinting. I am sure this post has touched all the internet visitors, its really really nice post on building up new webpage. I have been surfing on-line greater than three hours as of late, but I by no means discovered any attention-grabbing article like yours. It’s lovely value sufficient for me. In my opinion, if all website owners and bloggers made just right content material as you probably did, the web will likely be much more helpful than ever before. http://Foxnews.org/

Leave a Comment