இந்தியா-சீனா லாடாக் மோதல்: ராஜ்நாத்சிங் அறிக்கைக்கு சீனாவின் பதில்!

லடாக் எல்லையில் சீன ராணுவத்துக்கு இந்திய ராணுவம் பெரும் இழப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது’ என  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பாதுகாப்பு ராஜ்நாத்சிங் கூறியிருந்தனர். இதற்கு இப்போது சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் தலையங்கம் மூலம் பதிலளித்திருக்கிறது.

லடாக் கிழக்குப் பகுதியில் இந்தியா ராணுவத்துடனான மோதலில் சீனா வீரர்கள் கொல்லப்பட்டதும் உண்மைதான்; ஆனால் இந்தியா தெரிவித்திருக்கும் எண்ணிக்கையைவிட குறைவுதான் என சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் தலையங்கத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறது.

லடாக் கிழக்குப் பகுதியில் சீனா ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டது. இதனை இந்திய ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர். அப்போது நிகழ்ந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 40 முதல் 60 வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் சீனா இதுவரை அதிகாரப்பூர்வமாக உயிரிழப்பு எண்ணிக்கையை அறிவிக்கவில்லை.

இதனிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் லோக்சபா, ராஜ்யசபாவில் எல்லை மோதல் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விரிவான அறிக்கைகளைத் தாக்கல் செய்தார். சீன ராணுவத்தினருக்கு பெரும் இழப்பையும் ஏற்படுத்தியிருந்தனர் என ராஜ்நாத்சிங் கூறியிருந்தனர். இதற்கு இப்போது சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் தலையங்கம் மூலம் பதிலளித்திருக்கிறது.

அதில், லடாக் மோதலில் சீனா வீரர்கள் உயிரிழந்தது உண்மைதான். ஆனால் சீனா வீரர்களின் மரண எண்ணிக்கை இந்தியா சொல்வதைப் போல இல்லை. அதைவிட குறைவுதான் என முதல் முறையாக ஒப்புக் கொண்டிருக்கிறது.

இந்திய ராணுவத்திடம் சீன வீரர்கள் ஒருவர்கூட சரணடையவில்லை என்றும் அந்த தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

Comments

Leave a Comment