இந்தி தெரியவில்லையா பயிற்சியிலிருந்து வெளியேறுங்கள்! மத்திய ஆயுஷ் அமைச்சகச் செயலருக்கு கனிமொழி எம்பி கண்டனம்

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் மருத்துவர்களுக்கு நடைபெற்ற இணையவழிப் பயிற்சி வகுப்பில் இந்தி மொழியில் மட்டுமே  வகுப்பு நடத்தப்பட்டது. இதில் இந்தி தெரியாத மற்ற மொழிவாரி மாநிலங்களிலிருந்து சுமார் 37 மருத்துவர்கள் இதில் கலந்துகொண்டனர். அவர்கள், ‘ஆங்கிலத்திலும் பயிற்சி அளித்திருந்தால் எங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும்’என்று கூறியபோது இந்தி தெரியாதவர்கள் ‘பயிற்சியிலிருந்து வெளியேறலாம்’ என ஆயுஷ் அமைச்சகச் செயலர் கூறியிருக்கிறார். இது, ‘பயிற்சியின் நோக்கத்தையே சிதைப்பதாகும்’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“புதுடெல்லியில் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடைபெற்ற இணைய வழி[ பயிற்சி வகுப்பில் தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர். ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், ஹோமியோபதி, யுனானி உட்பட அலோபதி அல்லாத மருத்துவர்கள் 37 பேர் இந்தி பேசாத மாநிலங்களிலிருந்து பங்கேற்றுள்ளனர். ஆனால், இந்த முகாமில் மொத்த பயிற்சியும் இந்தி மொழியிலேயே நடைபெற்றுள்ளது.

பயிற்சி முகாமில் பங்கேற்ற இந்தி பேசும் மாநிலங்கள் அல்லாத மருத்துவர்கள் கேள்வியெழுப்பியபோது, ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்தியா ராஜேஷ் கொடேசா ‘எனக்கு ஆங்கிலம் சரளமாக பேசவராது, நான் இந்தியில்தான் பேசுவேன். ஆங்கிலம்தான் வேண்டுமென விரும்புபவர்கள் பயிற்சி முகாமிலிருந்து வெளியேறலாம்’ என்று ஆணவமாக கூறியுள்ளார். ஆயுஷ் அமைச்சக செயலாளரின் இந்தப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மாநில மொழிகளிலும் பயிற்சி வகுப்பை நடத்தியிருந்தால் இந்தி தெரியாத மருத்துவர்களுக்கு வசதியாக இருந்திருக்கும். ஆனால், ஒரு மொழியில் மட்டுமே பயிற்சி நடத்துவோம். இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள் என்று கூறுவது பயிற்சியின் நோக்கத்தையே சிதைப்பதாகும்.

எனவே, மத்திய அரசு இந்தப் போக்கைக் கைவிட்டு இனிவரும் காலங்களில் அகில இந்திய அளவிலான பயிற்சி வகுப்புகளில் இந்தி மட்டுமல்லாமல் ஆங்கிலம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மாநில மொழிகளிலும் பயிற்சியளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். தமிழகம் உள்ளிட்ட பிற மாநில மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கனிமொழி எம்பி கண்டனம்

இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி, “இந்தி புரியாத பங்கேற்பாளர்களை, ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள ஆன்லைன் பயிற்சி அமர்வில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டதற்காக, மத்திய ஆயுஷ் அமைச்சகச் செயலாளர் வைத்ய ராஜேஷ் கோடெச்சாவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்” என சனிக்கிழமையான நேற்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மூன்று மாத இணையவழிப் பயிற்ச்சிக்கான அறிவிப்புகள் மற்றும் நோய் எதிர்ப்பு மாற்று மருத்துவம் குறித்த வலையொளிகள் ஆகியவற்றை ஆங்கிலத்திலும் ஆயுஷ் அமைச்சகம் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளது.

ஆயுஷ் அமைச்சகம் ஆங்கிலத்தில் வெளியிட்ட பயிற்சி அறிவிப்பு

Comments

 • SammyYZ

  5 months ago

  ?????????? ?????? ??? ??????

 • ElizeGaus

  6 months ago

  Error 212 origin is unreachable

 • Cornell

  2 years ago

  This is a topic which is near to my heart... Thank you! Where are your contact details though? I have been browsing online greater than 3 hours lately, but I never discovered any attention-grabbing article like yours. It’s lovely worth enough for me. In my view, if all website owners and bloggers made good content material as you probably did, the internet will likely be a lot more helpful than ever before. It’s appropriate time to make some plans for the future and it is time to be happy. I have read this post and if I could I desire to suggest you few interesting things or suggestions. Perhaps you can write next articles referring to this article. I wish to read more things about it! http://newground.com

 • russian call girls in delhi

  2 years ago

  We provid High Profile Escort Service in India. https://www.toprussianescort.com/

Leave a Comment