ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய கட்டணம் உயர்வு!

ஆதார் அட்டையில் உங்களது விவரங்களில் திருத்தம் செய்வதற்கு வசூலிக்கப்படும் சேவை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆதார் பதிவில் உள்ள கைரேகை, கண் கருவிழி உள்ளிட்ட விவரங்களை திருத்தம் செய்வதற்கான கட்டணம் 100 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வீட்டு முகவரி விவரங்களை திருத்தம் செய்வதற்கான கட்டணம் 50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், ஆதார் எண் பெறவும், திருத்தங்கள் செய்யவும் சேவை மையங்களில் முன்கூட்டியே முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பையோமெட்ரிக், செல்போன் எண், புகைப்படங்களை புதிப்பிப்பதற்கு இனி எந்த ஆவணங்களையும் கொண்டு செல்லத் தேவையில்லை.


Comments