சென்னையில் இன்று தொடங்கியது ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிப் பரிசோதனை!

Image Source:@SERUMINSTINDIA TWITTER

இன்றைய நிலவரக் கணக்கீட்டின்படி உலகம் முழுக்க இதுவரை சுமார் 2.46 கோடி மக்களுக்கு அதிகமானோர் கோவிட் பெருந் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முனைப்போடு, உலகம் முழுக்க ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள, கோவிஷீல்டு தடுப்பூசி வெற்றிகரமாக அடுத்தடுத்த படிகளை எட்டி வருகிறது.

இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட், ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த கோவிஷீல்டு தடிப்பூசி, தற்போது மூன்றாம் கட்ட மனித சோதனையில் உள்ளது. இந்த சோதனையை இந்தியாவில் நடத்துவதற்கு, இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்திருந்தது. அதற்கான முதல் படியாக, கோவிஷீல்டு தடுப்பூசி சோதனை, இன்று முதல் தமிழகத்தில் தொடங்குகிறது.

தமிழகத்தின் சென்னையில், ராமச்சந்திரா மருத்துவமனையிலும், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் கோவிஷீல்டு தடுப்பூசி சோதனைகள், 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 300 தன்னார்வலர்களுக்கு, இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், இதுக்குறித்து மருத்துவ இயக்குநரகம் தெரிவிக்கையில்,  ‘சோதனையின் செயல்பாடுகள் மற்றும் விளைவுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்படும்.  இந்தப் பொறுப்பை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கவனிப்பார்கள்’ என்று, தெரிவித்துள்ளது.

Comments

Leave a Comment