கொரோனாவுக்காக தனிமைப்படுத்தப்பட்ட பெண் சென்னை நட்சத்திர விடுதியில் தற்கொலை!

லண்டன் நகரிலிருந்து சென்னைக்குத் திரும்பிய நடுத்தரவயதுப் பெண் ஒருவர், அதிகாரிகளின் வாழிகாட்டுதலை ஏற்று,  கிண்டி கத்திப்பாரா அருகேயுள்ள நட்சத்திர விடுதியில்தனிமைப்படுத்தலுக்காக  தங்கியிருந்தபோது தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  இந்த சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு உலக நாடுகளில் கொரோனா காரணமாக நாடு திரும்ப முடியாமல் தவித்து வரும் இந்தியர்களை  வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் மத்திய அரசு அழைத்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சென்னை  விமான நிலையத்துக்கு இதுவரை 68,306 பேர் வந்துள்ளனர். இவர்களில் 899 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து வக்கூடியவர்கள் அரசு ஏற்பாடு செய்திருக்கும் கல்லூரிகளில் இலவசமாகவும் நட்சத்திர விடுதிகள் எனில் தங்கள் சொந்தப் பணத்தை செலுத்தியும் 14 நாள் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டு பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

கடந்த 24-ஆம் தேதி லண்டனில் இருந்து சென்னை வந்துள்ளார் கோவை சேர்ந்த மனோன்மணி (47). அவர், கிண்டி கத்திபாரா சந்திப்பின் அருகாமையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில்  தங்கி இருந்தார். இவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. மூன்றாம் நாள் தொற்று இல்லை எனவும் தெரியவந்தது. ஆனால், தொற்று இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனிமைப்படுத்தல் அவசியம் என  அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதை ஏற்று அங்கே தங்கியவர்,  லண்டனில் உள்ள தனது மகளிடம் தொலைபேசி வழியாக பேசிக்கொண்டு இருந்துள்ளார். தனது மகளிடம் மனோன்மணி பேசும்போது “கொரோனா தொற்று இல்லாமல் இங்கு இருப்பது பயமாக இருக்கிறது” என்று புலம்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் அப்படிப் புலம்பிய மறுநாள் காலை, லண்டனில் உள்ள மகள் செல்போனில் தயார் மனோன்மணிக்கு அழைத்து உள்ளார். நீண்ட நேரமாக எடுக்காததால் நண்பர்களிடம் சென்று பார்க்குமாறு தகவல் கூறினார். அவர்கள் ஒட்டலுக்கு சென்று மனோன்மணி இருந்த அறைக்கு சென்று பார்த்தபோது அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனோன்மணி கொரோனா பயத்தில் தற்கொலை செய்துக் கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

Leave a Comment