கீடோ உணவு Keto diet மூலம் உடல் எடை குறைக்க முயன்ற பிரபல நடிகை மரணம்!

மிஷ்டி முகர்ஜி
பல இந்திப் படங்கள், மியூசிக் வீடியோக்கள் மற்றும் விளம்பரங்களில் தோன்றி புகழ்பெற்ற பெங்காளி நடிகை மிஷ்டி முகர்ஜி. பெங்களூருவில் பிறந்து வளர்ந்த இவர், பாலிவுட்டில் வாய்ப்புகள் பெருகியதையடுத்து கும்பத்தினருடன் மும்பையில் குடியேறி வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கோரோனா ஊரடங்கு காரணமாக பெங்களூருவுக்குத் திரும்பி உடல் எடையைக் குறைக்க கடும் முயற்சிகளைச் செய்து வந்துள்ளார். இதற்காக அனுபவமற்ற சில டயட் ஆலோசகர்களின் அறிவுரையை ஏற்று கீடோ (Keto diet) எனப்படும் உணவை உண்டு, மற்ற இயல்பான உணவுகளைக் கண்மூடித்தனமாக தவிர்த்து ஒரு நாளில் இருவேளைகள் வரை பட்டியும் கிடந்துள்ளார். இறுதியில் பெங்களூரு மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு (அக்டோபர் 2) கடைசியாக மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. ஊடக அறிக்கையின்படி, மிஷ்டி முகர்ஜி தொடர் பட்டினிகள் காரணமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், இதனால் அவரது அகால மரணம் ஏற்பட்டதும் தெரியவந்திருப்பதாக அந்த அறிக்கைக் கூறுகிறது. 27 வயதான நடிகை மிஷ்டி பல தெலுங்கு, பெங்காலி படங்களிலும் நடித்திருந்தார். பாலிவுட்டில் கடந்த 2012-ல் வெளியான ‘லைஃப் கி தோ லாக் கெய்’படத்தின் மூலம் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கீடோ உணவு என்றால் என்ன, அது சிறுநீரகங்களை பாதிக்குமா?

கெட்டோஜெனிக் உணவு (கெட்டோ உணவு) என்பது அதிக கொழுப்பு, மிதமான-புரதம், குறைந்த பதப்படுத்தப்பட்ட மாவுச்சத்து உணவு ஆகும். இது கெட்டோசிஸை அடைவதன் மூலம் எடை இழப்புக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு  கெட்டோ உணவில் சுமார் 75 சதவீதம் கொழுப்பு, 20 சதவீதம் புரதம் மற்றும் ஒரு நாளைக்கு 5 சதவீதம் மாவுச்சத்து மட்டுமே இருக்க வேண்டும். இந்த உணவின் பின்னணியில் உள்ள மாவுச்சத்து மூலங்களையும் (நமது உடல் எரிபொருளாகப் பயன்படுத்துகிறது; அதாவது உடல்செல்களுக்குத் தேவையான சர்க்கரையாக மாற்றுகிறது) அகற்றுவதோடு, அதற்கு பதிலாக கொழுப்பை உடலின் ஆற்றல் மூலமாகப் பயன்படுத்துவதாகும். இந்த செயல்முறை கெட்டோசிஸ் என்று அழைக்கப்படுகிறது.

அதிக கொழுப்புள்ள உணவு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதாக கூறப்பட்டாலும், பல அதிகாரபூர்வ இந்திய ஆய்வுகள்  பாதகமான விளைவுகயும் அவை ஏற்படுத்தும் என்பதையும் எல்லோருக்கும் இது பொருந்துவதில்லை என்றும் நிறுவியுள்ளன. இந்த வகை உணவு வடிகட்டுதலில் சிறுநீரகங்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி சிறுநீரக கற்களுக்கு வழிவகுக்கும். கெட்டோ அதிக கொழுப்புள்ள உணவாக இருந்தாலும் புரதத்தின் மிதமான அதிகரிப்பு கவனமாக கண்காணிக்கப்பட வேண்டும், குறிப்பாக ஏற்கனவே சிறுநீரக நோய் அல்லது வேறு எந்த வகையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிடமும். ஐ.நா. இந்த உணவுகளை, குறிப்பாக சிவப்பு இறைச்சியை நீங்கள் அதிகம் உட்கொண்டால், அது சிறுநீரக கற்களை உருவாக்கும் அபாயத்திற்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளது.

எச்சரிக்கை!

பல ஆய்வுகளின்படி, சிறுநீரக கற்கள் கீடோ உணவை எடுத்துக்கொள்வதின் பக்க விளைவுகளில் ஒன்றாகும். எனவே, நீங்கள் இந்த உணவை எடுத்துக்கொண்டால் உங்கள் சிறுநீரகங்களுக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க நிறைய தண்ணீர் குடிப்பது மட்டுமல்ல, சிறுநீரகக் கற்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கக் கூடிய கூடுதல் மருத்துவத்திற்காக உங்கள் மருத்துவரின் ஆலோசனைகளையும் பின்பற்ற வேண்டும். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உணவில் கடுமையான மாற்றங்களைச் செய்வதற்கு முன்பு எப்போதும் தங்கள் மருத்துவர் மற்றும் முறையான உணவியல் நிபுணரை அணுக வேண்டும். கீடோ உணவை எடுத்துக்கொள்ளும் முன் ஒன்றுக்கு மூன்று முறை யோசனை செய்யுங்கள்.

ரெட் மீட் எனப்படும் கொழுப்பு அதிகமுள்ள மாமிசம்

Comments

Leave a Comment