கொஞ்சமும் பசி அடங்காத நடிகர் சூரி!

நகைச்சுவை நடிகன் என்பவன் சமூகத்தின் கண்ணாடி. சமூகத்தின் அவலங்களையும் கவலைகளையும் தான அவன் தனது நகைச்சுவையின் வழியாக பகடி செய்கிறான். அப்படியொரு சமூகத்தின் பிரதிபலிப்பாக, மக்களின் வாழ்க்கையிலிருந்து அசலான நகைச்சுவையை எடுத்தாள்பவர் சூரி. அதனால் அவரை மக்களின் கலைஞன் என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். அவர் தனது அறிமுகப்படத்தில் பசி அடங்காத இளைஞனாக பரோட்டாக்களை சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் நகைச்சுவை இன்றைக்கும் பசுமையாக அப்படியே ரசிகர்களின் மனதில் இருக்கிறது. அதேபோல, கதாநாயகர்களின் நண்பனாக நடித்தாலும் கதாபாத்திரத்தில் நடித்தாலும் தனது மண்வாசனையை சூரி விட்டுத் தருவதே இல்லை. குறிப்பாக குழந்தைகளுக்கும் பிடித்தமான ‘மக்கள் அன்பன்’ சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்து செய்த நகைச்சுவைகள் முழுமையான நிறைவை அளித்தவை. அப்படிப்பட்ட சூரி தன்னை வாழ்விக்கும் தமிழ்ச் சமூகத்துக்காக  சேவை செய்வதிலும் அடங்காத பசி கொண்டவர்.

கொரோனா காலத்திலும் தன் முடிந்த உதவிகள் அனைத்தையும் இந்த நிமிடம் வரை செய்துகொண்டிருக்கும் அற்புதக் கலைஞன். இன்று நடிகர் சூரியின் பிறந்த நாள். அதை  முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவரது ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பாக பல நலத்திட்ட உதவிகள், இரத்த தானம், மரக்கன்றுகள் நடுதல், புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கி மகிழ்வித்திருக்கிறார் சூரி.

மதுரை அம்மன் சைவ உணவக வளாகத்தில் நடிகர் சூரியின் சகோதரர் லட்சுமணன் தலைமையிலும், திருநெல்வேலியில் உதயகுமார் தலைமையிலும், நாகர்கோவிலில் சதீஷ்ராஜா தலைமையிலும்  சென்னையில் சூரி நற்பணி இயக்கத்தின் சார்பாக ஆதீஸ்வரன் தலைமையிலும்  கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து  மதிய உணவு வழங்கினர்கள்.

நாகர்கோவிலில் சதீஷ்ராஜா  தலைமையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 5 கிலோ அரிசி காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினர். பாண்டிச்சேரியில் முதியோர் இல்லத்தில் சதீஷ்ராஜா மதிய உணவும் வழங்கினார். தருமபுரி, கரூர் மாவட்டங்களில் நற்பணி இயக்கம் சார்பாக அரசு மருத்துவமனையில் இரத்த தான முகாம் மூலம் இரத்த தானம் வழங்கினர்.  கடலூர்,தருமபுரி மாவட்டங்களில் நற்பணி இயக்கம் சார்பாக முதியோர் இல்லத்தில் மதிய உணவு மற்றும் புத்தாடைகள்  வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் நற்பணி இயக்கம் சார்பாக ஆதரவற்றோருக்கு இனிப்புகள், மதிய உணவு வழங்கப்பட்டன.  மதுரை மற்றும் பாண்டிச்சேரியில் நற்பணி இயக்கம் சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் சனிடைசர் வழங்கப்பட்டன.

ஆச்சரியகரமாக நடிகர் சூரியின் அண்ணன் லட்சுமணனுக்கும் இன்றுதான் பிறந்தநாள். சூரியைவிட அவரது அண்ணன் இரண்டு வயது மூத்தவர்.

சூரி நற்பணி இயக்கம்

Comments

Leave a Comment