ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி: உலக சுகாதார நிறுவனம் பின்வாங்கியது ஏன்?

கோவிட் 19 பெருந்தொற்று ஏற்படாமல் இருக்க அந்த வைரஸுக்கு எதிரான எதிர்பாற்றலை உடலில் உருவாக்க்கும் தடுப்பூசியை எந்த நாடு முதலில் கண்டுபிடிக்கும் என உலக நாடுகளிடையே பெரும் போட்டி நிலவி வந்தது. இந்த போட்டியில் ரஷ்யா வெற்றி பெற்றுள்ளது. ரஷ்யாவின் முதல் கொரோனா தடுப்பூசியை கமாலெயா (Gamaleya) ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து உருவாக்கியுள்ளது.  ஸ்புட்னிக் வி என்ப் பெரியரிடப்பட்டுள்ள இந்தத் தடுப்பூசி, கரோனாவிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு பாதுகாப்பு தரும் என் கமாலெயா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தத் தடுப்பூசியின் பரிசோதனைகள் கடந்த ஜூன் 18-ல் தொடங்கப்பட்டுள்ளன. 38 தன்னார்வலர்களுக்கு இந்த மருந்து செலுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் குழுவுக்கு ஜூலை 15-ம் தேதியும் இரண்டாம் குழுவுக்கு ஜூலை 20-ம் தேதியும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. சோதனை செய்யப்பட்ட இரு குழுக்களும் தற்போது நலமாக உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த அறிவிப்பு உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் புதிய தடுப்பூசியை அந்நாட்டு அதிபரின் இரண்டு மகளில் ஒருவருக்கும் செலுத்தி சோதனை செய்யப்பட்டதாகவும், அவர் நலமாக உள்ளதாகவும்  பரவிய செய்தியை ரஷ்ய ஊடகங்கள் தற்போது மறுத்துள்ளன.

அதேநேரம் வரும் அக்டோபர் மாதம் முதல் நாடு முழுவதும் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் தடுப்பூசியைப் பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டுவரவிருப்பதாக ரஷ்ய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.  இதைப் பற்றி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசும் போது, “கோவிட் 19 வைரஸுக்கு தடுபாற்றலை உருவாக்கும் தடுப்பூசியை உலகில் முதல் முதலாக உற்பத்தி செய்து இருக்கிறோம். தடுப்பூசி விரைவில் மக்களின் பயன்பாட்டுக்காக அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ரஷ்யாவின் கோவிட் 19 தடுப்பூசியை வரவேற்றுள்ள உலகச் சுகாதார நிறுவனம், “ உலகளவில் உச்சக் கட்டப் பரிசோதனையில் இருக்கும் ஒன்பது தடுப்பு மருந்துகளின் பட்டியலில் ரஷ்யாவின் தடுப்பூசி இல்லை என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அது பட்டியலில் சேர்க்க்கப்பட வேண்டுமானால், ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து தொடர்பான தகவல்களை ரஷ்யா எங்களுக்குக் கொடுக்க வேண்டும். அத்தகவல்கள் கிடைத்த பின்னரே இது குறித்து கருத்துச் சொல்ல முடியும்.  எனவே அக்டோபர் வரையில் காத்திருக்கப்போகிறோம்” என உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் புரூஸ் அயல்வார்ட் தெரிவித்துள்ளார்.