ரஜினிக்கு முன் கட்சி தொடங்குகிறார் விஜய்?

கோலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் ஸ்டாரான விஜய், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘தலைவா’ என்ற படத்தில் நடித்தபோது, அந்தப் பட வெளீயீட்டில் பல தடைகளைச் சந்தித்தார். அதற்குக் காரணம், ‘தலைவா’ விஜயின் அரசியல் விருப்பத்தை நேரடியாகப் பேசுகிறது என்று காரணம் கூறி ஆட்சியில் இருந்தவர்களாலும் விஜயைப் போட்டியாகக் கருதும் திரையுலகினரும் இணைந்து சதி செய்தனர் என்று கூறப்பட்டது.

இது ஒருப்பக்கம் இருக்க, விஜய் மக்கள் இயக்கத்துக்கு கொடி, அதில் ‘உன்னால் முடியும்’ என்ற இலச்சினை வாசகம், விஜய் ‘உன்னால் முடியும்’ என்று சுட்டு விரலை நீட்டிச் சொல்லும் அவரது படம் என ஒரு அரசியல் கட்சி எப்படி இயங்க வேண்டுமோ அப்படி மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு அதைத் தலைமை தாங்கி நடத்தி வருகிறார் விஜயின் அப்பாவான எஸ்.ஏ.சி.

கலைஞானி கமலின் 60-வது பிறந்த நாள் விழாவில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகரன், “ரஜினியும், கமலும் அரசியலில் இணைந்து பயணிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். அதன்பிறகு தம்பிகளுக்கும் அவர்கள் வழிவிட வேண்டும்” என்று பேசியது விஜய்யை மனதில் வைத்துதான் என்றால் அரசியல் நோக்கர்கள். இதன்பிறகே விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய பிறகு எஸ்.ஏ.சி. தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வரும்போது விஜய் வரக்கூடாதா? விஜய், இந்த மண்ணின் மைந்தன்” என்று கேட்டார். தற்போது எஸ்.ஏ.சி. விஜய் மக்கள் இயக்கத்தை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கான வேலைகளில் இறங்கியிருப்பதாக செய்திகள் வருகின்றன.  இதற்காக அவர், தலைமைத் தேர்தல் கமிஷனில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் சிலருடன் பேசியதாகவும் அரசியல் கட்சியை வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் பதிவு செய்தால் படிப்படியாக செய்ய வேண்டிய அரசு நடமுறைகள் என்ன என்பது பற்றியும் வழக்கறிஞர்கள் சிலருடன் ஆலோசனை நடத்தி வருவதாக நம்பகமான தகவல்கள் விஜய் தலைமன்றத் தரப்பினரிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கான வேலைகளில் இறங்கியிருப்பதாக செய்திகள் வருகின்றனComments

Leave a Comment