மருத்துவப் படிப்புகளுக்கான ஓபிசி இட ஓதுக்கீடு இந்த ஆண்டே கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்தாண்டே வழங்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு உடனே பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி, திமுக, அதிமுக, தமிழக அரசு, பாமக, திக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் “மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் இயற்றலாம். இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து முடிவெடுக்க மாநில அரசு மற்றும் எம்.சி.ஐ. அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்து முடிவெடுக்க வேண்டும். 3 மாதத்தில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டது. இதையடுத்து மருத்துவ படிப்பில் ஓபிஎசி மாணவர்களுக்கு 50 சதவீதஇட ஒதுக்கீடு இந்தாண்டே வழங்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் “நீட் தேர்வு இந்தாண்டு நடக்கவில்லை. ஓபிசி மாணாக்கர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்தாண்டே வழங்க முடியுமா என்பது குறித்து மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பதிலளிக்க வேண்டும்” என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Comments

Leave a Comment