‘நானும் ரவுடி தான்’ படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது. தங்கள் காதலை உலகுக்கே தெரியும்படி, தினசரி நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து எடுத்துக்கொள்ளும் விதவிதமான செல்ஃபி படங்களை தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் போட்டிபோட்டு இருவருமே வெளியிட்டு வந்தார்கள்.
லிவிங் டுகெதர் முறையில் இருவரும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வந்தாலும், முறைப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. இதனால் ஊடகங்களின் கிண்டலுக்கும் ரசிகர்களின் ட்ரொலுக்கும் தொடர்ந்து ஆளாகி வந்தார்கள். தற்போது ஒருவழியாக முறைப்படி திருமணம் செய்து கொள்வது என்று முடிவு எடுத்திருக்கிறார்கள். வரும் நவம்பர் மாதம் இரு தரப்பு குடும்பத்தார் முன்னிலையில் வீட்டிலேயே எளிமையான முறையில் திருமணம் செய்துகொள்ள இருவம் முடிவெடுத்திருக்கிறார்கள். இதை விரைவில் தங்கள் சமூக வலைதள பக்கம் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் இருக்கிறார்கள்.
நயன்தாரா - விக்னேஷ் திருமணம் பதிவாகிவிட்டதா?

Comments
anbu
2 years agovery nice
Test
2 years agotest