நடமாடும் வடைகடையாக மாறிய ஆட்டோ!

ஆட்டோவிலேயா சுடச் சுட வடை
கொரோனா பெருந்தொற்று காரணமாக 150 நாட்களாக இந்தியாவில் தொடர்ந்து வரும் ஊரடங்கு காரணமாக, பல தரப்பினரும்  வாழ்வாதாரம் இழந்துள்ளனர். முக்கியமாக பொதுப்போக்குவரதில் சாமானிய நடுத்தரமக்களின் வாகனமாக இருந்துவரும் ஆட்டோக்கள் முற்றிலும் முடங்கிவிட்டனர். இந்நிலையில் மதுரையில் ஒட்டுநர் ஒருவர் தன்னுடைய  ஆட்டோவை வடை மற்றும் பட்சனம் விற்கும் கடையாக மாற்றி வியாபாரம் செய்து வருகிறார்.

மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலகிருஷ்ணன். இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் கோச்சடை பகுதியில் கடந்த 15 வருடங்களாக ஆட்டோ ஓட்டி அதன் மூலம் வருவாய் ஈட்டி வந்தார். இந்நிலையில் தற்போது கொரானா பொது முடக்கத்தால் பொதுப்போக்குவரத்துக்கு மூன்று மாதங்களுக்கு மேல் தடை விதிக்கப்பட்டிருந்தது. 5-ஆம் கட்ட ஊரடங்கில் ஆட்டோக்களை இயக்க அரசால் அனுமதி அளிக்கப்பட்டது.

ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டாலும், கொரோனா வைரஸ் அச்சத்தால் பொதுமக்கள் ஆட்டோ மற்றும் வாடகை வாகனங்களில் பயணம் மேள்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் முறையான வருமானமின்றி ஆட்டோ ஓட்டுநர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பாலசுப்பிரமணியன் ஆட்டோ ஓட்டுவதை நிறுத்திவிட்டு, ஆட்டோவை வடை கடையாக மாற்றி நான்கு வடை 10 ரூபாய் என விற்பனையில் ஈடுபட்டுள்ளார். ஆட்டோவில் அடுப்பு, வடை சுடும் பாத்திரம், வடைகளை வைக்க கண்ணாடிப்பெட்டி என சவாரி ஆட்டோவை முழுமையான வடை கடையாக மாற்றி தற்போது அதன்மூலமே வருவாய் ஈட்டி வருவதாகவும் தெரிவிக்கிறார்.

அதேபோல் சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான அருள் ராஜ். சென்னையில் ஆட்டோ ஓட்டி மாதம் 15,000 வரை சம்பாதித்துக் கொண்டிருந்தநிலையில் தற்போது அட்டோ மூலம் மீன் வியாபாரம் செய்து வாழ்க்கையை வெற்றிகரமானதாக மாற்றிக்கொண்டிருக்கிறார்.


ஆட்டோவில் மீன் விற்பனை செய்யும் அருள்ராஜ்

Comments

Leave a Comment