திசை எட்டும் பரவட்டும் தமிழ்...

உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களின் இதயங்களை இணைக்கும் செய்தி இணையம் WWW.ENTHISAI.COM. இது இந்தியத் தமிழர்களின் தாயகமான தமிழகத்தின் தலைநகரான சென்னையிலிருந்து ‘எண்திசை மீடியா’ ஊடக நிறுவனத்தால் நடத்தப்பட்டுவரும் முழுமையான செய்தி இணையதளம்.

இந்திய, தமிழக நிகழ்வுகள் முதன்மைச் செய்திகளில் இடம்பிடிக்கும் அதே நேரம், இலங்கை, கனடா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, இத்தாலி, இந்தோனேசியா, ஈராக், எமிரேட்ஸ், ஓமான், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், நார்வே, தென்னாப்ரிக்கா, மொரிசியஸ் அந்தமான் உட்படத் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளிலிருந்து உடனுக்குடன் முக்கிய நிகழ்வுகளைத் தர அந்தந்த நாடுகளில் செய்தியாளர்களைக் கொண்டுள்ளது WWW.ENTHISAI.COM.

அச்சு ஊடகம், தொலைக்காட்சி, வானொலி, இணையம் ஆகியவற்றில் மூன்று பத்தாண்டுகள் தேர்ச்சியும் முதிர்ச்சியும் மிக்க இதழியல் அனுபவம் கொண்ட ஊடகவியலாளர்களின் பங்களிப்புடன், ‘வளர்ச்சிக்கான இதழியலை’நோக்கி இணையவெளியில் தனித்துவ இணையதளமாக எண்திசை.காம் தனது பயணத்தை உறுதியுடன் முன்னெடுக்கிறது. நீங்கள் தரும் மேலான ஆதரவே அதற்கான உயிர் மூச்சு.

செய்தி எனும் தகவல் வரலாற்றுடன் நின்று விடாமல், உலகம் முழுவதும் பரவி வாழும் இன்றைய தமிழர் தலைமுறைகளின் வெற்றிக் கதைகளை, கலை, பண்பாட்டுச் சாதனைகளை, தாய் மொழி மீதானக் காதலை, கடந்த கால வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை, சுவை குன்றாத குறுங் கட்டுரைகளாக.. காணொலிகளாகத் தருகிறது.

நேசிக்கப்படும் இணைய ஊடகமாக எண்திசை மீடியா உங்கள் திறன்பேசியின் திரையிலும் கையடக்கக் கணினித் திரையிலும் உங்கள் நேரத்தின் மதிப்பைப் பயனுள்ளதாகப் பொழுதுபோக்கு நிறைந்ததாக மாற்றிக் காட்டும் என்ற தமிழின் மீதான நம்பிக்கையுடன்...

எண்திசை மீடியா குழுமம்  

Comments

Leave a Comment