திண்டுக்கல் மாவட்டம், தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊர் பாலமரத்துபட்டி. அந்த ஊரில் காளீஸ்வரன் என்பவரது வீட்டில் சிபிஐ அதிகாரி என கூறி, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு கும்பல் நுழைந்து சோதனைபோடுவதுபோல் நடித்துள்ளனர். பின்னர் காளீஸ்வரன் வீட்டில் இருந்த பணம், நகைகளை அள்ளி சென்றனர். இதுகுறித்து திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மணிமாறன், திண்டுக்கல் ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்வினோத் ஆகிய இரு அதிகாரிகள் தலைமையில் தனிப்படை அமைத்தது காவல் துறை.
இந்தத் தனிப்படையில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன், தனிப்படை உதவி ஆய்வாளர் பாஸ்டின் தினகரன், உதவி ஆய்வாளர் மாரிமுத்து, தலைமை காவலர்கள் சங்கரநாராயணன், .செந்தில்குமார், சந்தியாகு மருதுபாண்டியன், அருளானந்தம், முதல் நிலை காவலர் பிரபாகரன், திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் முதல் நிலை காவலர்கள் பி.ராஜசேகர், ஜி.மணிகண்டன், எஸ்.சக்திவேல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இப்படை மர்ம கும்பலை பொறி வைத்துத் தேடி வந்தனர்.
இந்நிலையில் அந்த கும்பல் திருப்பூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்ததை அதையடுத்து தனிப்படையினர் 12.08.2020-ஆம் தேதி விரைந்து சென்று ஒரு பெண் உட்பட ஆறு நபர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ 5 கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள் 100 பவுன் தங்க நகைகள் ரூபாய் 5 லட்சம் பணம் மொத்தம் உட்பட ரூ பாய் 6.5 கோடி மதிப்புள்ள சொத்து, பணம், நகைகளைப் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் எம்.எஸ் முத்துச்சாமி இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ரவளி பிரியா இ.கா.ப ஆகிய உயரதிகாரிகள் பாராட்டினார்கள்.
சி.பி.ஐ அதிகாரிகள் எனக் கூறி கொள்ளையடித்த கும்பல்: பொறி வைத்துப் பிடித்த திண்டுக்கல் போலீஸ்!

Comments