சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் ஒளிப்படங்கள்

டாக்டர் படத்தின் காட்சிகள்
சிவகார்த்திகேயன், அனிருத் ஹிட் கூட்டணியில் இயக்குநர் நெல்சனின் வெற்றி ராசியும்  இணைந்துள்ளது ரசிகர்களை குதூகலம் கொள்ளச் செய்திருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களுக்கு சரியான விருந்தாக வெளியானதோடு, படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டீவி பெரும் விலைக்கு கைப்பற்றியுள்ள செய்தியும் தற்போது  வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ள, இப்படத்தின் படத்தின் முக்கிய காட்சிகள் கோவாவில் நடைபெறுவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் வித்தியாசமான லுக்குடன், படத்தில் அவரது கதாப்பாத்திரம் குறித்து பெரும் மர்மம் நிலவும் நிலையில்,படத்தின் முதல் தோற்றத்தில் சிவகார்த்திகேயனை சுற்றி இருக்கும் ‘மெடிகல் சர்ஜிகல் கத்திகள்’படத்தின் கதை என்னாவாக இருக்கும் என்ற  எதிர்பார்ப்பை அதிகப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் தென்னிந்திய சினிமாக்களில் சமீபத்திய பரபரப்பான  நடிகை பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, காமெடியில் கலக்கி வரும் யோகிபாபு, சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கிறார். ஸ்டைலீஷ்  நாயகன்  வினய் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். KJR Studios உடன் இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கிறார். கோலமாவு கோகிலா புகழ் நெல்சன் இப்படத்தினை இயக்குகிறார்.


Comments

Leave a Comment