சாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர் கரோனாவுக்கு பலி!

கரோனாவிலிருந்து குணமடைந்த முத்துராஜ்
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் லாக்-அப் துன்றுறுத்தல் காரணமாக கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஜெயராஜ் - பென்னிக்ஸ் இரட்டை கொலை வழக்கில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், காவலர்கள் பால்துரை, முத்துராஜ்,முருகன் ஆகிய மூன்று பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது, மூவரும் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், எஸ்.எஸ்.ஐ பால்துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காவலர் முத்துராஜ் பூரண குணமடைந்ததை தொடர்ந்து மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Comments

Leave a Comment