கேக்கில் கலை வண்ணம் காட்டிய சாயீசா!

ஜெயம்ரவி நடித்த ‘வனமகன்’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அடி வைத்தார் சாயீஷா.. பின்னர் தமிழில் கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா போன்ற படங்களில் நடித்தார். இவர் பிரபல பாலிவுட் நடிகர் சுமீத் சைகலின் மகள். கஜினிகாந்த் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகர் ஆர்யாவுடன் காதல் ஏற்பட்டு, கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு சூர்யாவுடன் ‘காப்பான்’ திரைப்படத்தில் நடித்தார் சாயிஷா.

இன்று சயீஷா தனது 23-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதையடுத்து ஆர்யா மற்றும் சயீஷா குடும்பத்தினர் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினர். சயீஷா ஒரு மாஸ்டர் செஃப் என்பது அனைவர்க்கும் தெரியும். எனவே பிறந்தநாள் கொண்டாடத்திற்காக அழகான கண்கவர் கேக் ஒன்றை சயீஷாவே தயாரித்துள்ளாராம்.

சயீஷாவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது ஆர்யா, சுந்தர் சி இயக்கும் அரண்மனை – 3 படத்திலும், பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘சல்பேட்டா’ என்னும் படத்திலும் நடிக்கவுள்ளார். இதேபோல் சாயிஷாவும் கன்னட படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். 

Comments

Leave a Comment