இன்றைய கரோனா அப்டேட்: இந்தியாவில் தொற்றும் - குணமடைதலும் ஒரே விகிதத்தில்!

இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17 லட்சத்தைக் கடந்துள்ளது, கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் பத்திரிகை குறிப்பு தெரிவிக்கிறது.

 கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்றுக்கு புதிததாக 64 ஆயிரத்து 553 பேர் ஆட்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 24 லட்சத்து 61 ஆயிரத்து 190 ஆக அதிகரித்துள்ளது. தொடரந்து 8-வது நாளாக நாள்தோறும் 60 ஆயிரத்துக்கும் மேல் நோய்தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த 7-ம் தேதி 20 லட்சத்தைக் கடந்த நிலையில் ஒரு வாரத்தில் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆறுதல் அளிக்கும் வகையில் கரோனாவிலிருந்து தொற்று விகிதம்,  குணமடைந்தோர் விகிதம் ஆகிவற்றின் எண்ணிக்கை இணை விகிதமாகச் செல்லத் தொடங்கியிருகிறது. ஒட்டுமொத்தமாக, இன்று 17 லட்சத்தைக் கடந்து, 17 லட்சத்து 51 ஆயிரத்து 555 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 6 லட்சத்துக்கு 61 ஆயிரத்து 595 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்த பாதிப்பில் இது 26.28 சதவீதமாகும்.

கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 1,007 பேர் உயிரிழந்தனர். இதனால் ஒட்டுமொத்த உயிரிழப்பு 48 ஆயிரத்து 40 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்த அளவில் பார்க்கும் போது உயிரிழப்பு சதவீதம் 1.95 சதவீதமாகக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவிலேயே அதிக அளவாக மகாராஷ்டிராவில் 413 பேர் உயிரிழந்தனர்.  நாட்டிலேயே குறைந்த அளவாக தெலங்கானாவில் 9 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் இன்றைய உயிரிழப்பு 119 பேர்.

 கரோனா நிலவரங்களை தினமும் பகல் 12 மணிக்கு என்திசை.காமில் தெரிந்துகொள்ளலாம். சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது கொரோனா .

இந்தியாவில் பரவி வரும் வேகம்

Comments

Leave a Comment