அப்பா - மகன் அடேங்கப்பா.. கூட்டணி!

மகன் துருவ் விக்ரமை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்துவதாக, தனது ஆருயீர் நண்பர் இயக்குனர் பாலாவை நாடினார் சியான் விக்ரம். இதற்கா தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக்  உரிமையையும் வாங்கிக் கொடுத்தார் சியான். ஆனால் தமிழ் ரீமேக்கை இயக்கிய இயக்குனர் பாலா மிக மொக்கையாக உருவாக்கி அந்தப்படத்தை சகிக்க முடியாத அளவுக்கு மாற்றியிருந்தார் இருந்தார் என்று சியான் விக்ரம் பரபரப்பாகப் பேட்டி அளித்தார். இதனால் அந்தப் படம் நிறுத்தப்பட்டது.

அர்ஜுன் ரெடி படத்தின் உதவி இயக்குனரையே வைத்து தமிழில் அந்தப்படத்தை ரீமேக் செய்தனர். ஆதித்யா வர்மா என்ற தலைப்பில் வெளியான அந்தப்படம் வெற்றி பெறாவிட்டாலும் துருவுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.  தற்போது விக்ரம், தனது மகன் நடிக்கும் இரண்டாவது படம் நிச்சய வெற்றியாக அமைய வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

இதற்காக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் கதை கேட்டார். அப்பா மகனாக விக்ரமும் துருவும் சேர்ந்து நடிக்கும் கதாபாத்திரங்கள் கொண்ட கதையை கார்த்திக் சுப்புராஜ் கூற, அதுதான் விக்ரமுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. தற்போது கோப்ரா மற்றும் துருவ நட்சத்திரம் படங்களின் பணிகளைமுடித்து கொடுத்த பின்னர், கார்த்திக் சுப்புராஜ் படத்தில் மகனுடன் இணைந்து நடிக்க இருக்கிறார் சியான் விக்ரம். அப்பாவும் மகனும் கார்த்திக் சுப்பா ராஜ் இயக்கத்தில் கூட்டணி சேர்வது ரசிகர்களின் பெரிதும் எதிர்பார்க்க தூண்டும் என்பதில் சந்தேகமில்லை. இந்தப்படம் விக்ரமின் 60-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது

Comments

  • test

    2 years ago

    test

Leave a Comment